Wednesday, September 19, 2012

சர்வதேசம் விரும்பும் போதெல்லாம் எம்மால் நடத்த முடியாது. நிமல்

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நாட்டில் தேர்தல் நடத்தப்படுகின்றதே யல்லாமல், வெளிநாடுகளின் தேவை க்கு அல்ல என்றும், வடமாகாண மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஒன்று விரைவில் நடத்தப்படும் என, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சர்வதேச சமூகம் விரும்பும் போதெல்லாம் எம்மால் தேர்தல் நடத்த முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் சர்வதேச அழுத்தத்திற்கு அடிப்பணிந்து செயலாற்றும் அரசாங்கமல்ல என தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் இறைமையையும் ஐக்கியத்தையும் பாதுகாக்கும் அரசாங்கமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் என்றும், எந்தவொரு சக்தியின் அழுத்தங்களினால் தேர்தல்கள் நடத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருத்தமான சந்தர்ப்பத்தில் நேர்மையான விதத்தில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தேர்தல்கள் நடத்தப்படும் என்றும், எந்தவொருவரின் அச்சுறுத்தலுக்காவும் செயல்பட மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment