கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபை தேர்தல் அமைதியாக இடம்பெற்றமை, மகிழ்ச்சிக்குரிய விடயமென, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார். இதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.தேர்தலை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பங்களிப்புச் செய்த மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், தேர்தல் கடமையில் ஈடுபட்ட ஊழியர்கள், பாதுகாப்பு தரப்பினர், அரச அச்சக திணைக்களம், தபால் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கும், தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக, தேர்தல்கள் ஆணையாளரினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பெறுபேறுகளை உரிய வகையில், வெளியிட்ட ஊடகங்களுக்கும், உண்மையான கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்த வாக்காளர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக, அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment