Thursday, September 20, 2012

வயோதிப மாமியார் மீது பாலியல் துஸ்பிரயோகம்! மருமகன் தலைமறைவு!

தனிமையிலிருந்த வயோதிப மாமி யாரை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு, மருமகன் ஒருவர் தலைமறைவாகியுள்ள சம்பவம் மொனராகலை சிரிகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்து சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, மனைவியை பிரிந்து வாழ்ந்துவந்த குறித்த நபர் நேற்று மதுபோதையில் வீட்டிற்கு சென்ற வேளையில் அங்கு தனிமையிலிருந்த வயோதிப மாமியாரை பலவந்தமாக இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் மொனராகலை பொலிஸாருக்கு முறையிட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றதாகவும், எனினும் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார் என்றும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment