மனித உடல் உறுப்புக்களைத் தானம் செய்வது தொடர்பாக அமுல்படுத்தப் பட்டிருந்த சட்டத் தடைகளை நீக்கு வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இதற்கிணங்க 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் மனித உடல் உறுப்புக்களைத் தானமாக வழங்குவதற்கு திட்டமிடல் ஆலோசனைக் குழுவென்றை நியமிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 1987ம் ஆண்டு மனித உடல் உறுப்புக்களைத் தானமாக வழங்குவதற்கான சட்டதிட்டம் கொண்டு வரப்பட்ட போதிலும் இதுவரை திட்டமிடல் ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கவில்லை என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment