நோரு தீவுக்கு செல்ல மறுத்த இலங்கையை சேர்ந்த 18 அகதிகளை, அவுஸ்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்புகின்றது. அவுஸ்திரேலியா செல்லும் சட்டவிரோத குடியேற்றக் காரர்களை நோரு தீவுக்கு இடமாற்றம் செய்வதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதுடன், அவர்களின் புகலிடம் கோரிக்கை நோரு தீவில் வைத்து பரிசீலனை செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தது.இதனையடுத்து, நோரு தீவுக்கு அனுப்பப்பட இருந்த இலங்கையை சேர்ந்த 18 புகலிடக் கோரிக்கை காரர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதாக அவுஸ்திரேலியா குடிவரவு அமைச்சர் கிரிஸ் போவ்ன் தெரிவித்துள்ளார்.
இதற்கினங்க நோரு தீவுக்கு செல்ல மறுத்த செய்வதற்கு 18 இலங்கையர்கள் இன்று சனிக்கிழமை கிறிஸ்மஸ் தீவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்டுகின்றனர் என அவுஸ்திரேலியா குடிவரவு அமைச்சர் கிரிஸ் போவ்ன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment