தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கா இராஜாங்க செயராளர் ரொபட் ஓ பிளேக் அவசர விடயமாக இரண்டுவார காலத்தில் இலங்கை வரவிருக்கின்றார் எனத் தெரியவருகின்றது.எதிர் வரும் கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு முன்பு வரும் அவர் இந்த அவசர பயணத்தின் போது முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் என்று சிங்கள ஊடகங்கள் ஊகங்களை வெளியிட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருடனும் கலந்துரையடலில் ஈடுபடுவார் என்றும் அறிய முடிகின்றது.
No comments:
Post a Comment