
அமெரிக்க CIA அமைப்பு, FBI பொலிஸ் மற்றும் அமெரிக்க அரச புலனாய்வு சேவை போன்ற நிறுவனங்கள் இலங்கை விடயங்கள் தொடர்பாக உளவு பார்க்கின்றன என்று முதல் தடவையாக விக்கிலீக்ஸ் இணையச் சேவை வெளிப்படுத்தியுள்ளது.
‘இரகசியம்’ என்ற தொனிப் பொருளில் இந்த உளவு பார்த்தலுக்கான அனுமதியை இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்டன் அம்மையார் வழங்கியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவு வழங்கிய ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகள் பற்றியும் அவர்கள் உளவு பார்த்திருக்கிறார்கள்.
விசேடமாக இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சம்பந்தமாக இவ்வாறு உளவு பார்த்தமை வெளியாகியுள்ளது. அமெரிக்க அரசாங்கம் இவ்வாறான இரகசிய செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்திருக்கவில்லை.
ஜெனிவாவில் மனித உரிமைகள் முன்மொழிவுகள் இடம் பெற முன்னர் இந்த உளவு பார்த்தல் இடம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment