இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்ததோடு அருகில் இருந்த ஒருவரும் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதை அடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் சென்ற போது அங்கு கூடியிருந்த மக்கள் முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீயிட்டு சேதப்படுத்தி எதிரிப்பு வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஒருவகை பதற்றம் நீடித்ததாகவும் அந்த சமயத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதலில் காயமடைந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசத்தின் பாதுகாப்புக் கடமைகளில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment