இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து சட்டவிரோதமாக ஆடை வர்த்தகத்தில் ஈடுபட்ட 4 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் இரு சந்தேக நபர்கள் கல்முனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். மற்றும் இருவர் மல்வத்த விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் பெண்களாவர்.சந்தேக நபர் இருவரும் கல்முனை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் அப்பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறும் உத்தரவிடப்படடது.
இதே வேளை சட்ட விரோதமாக இலங்கைக்கு வருகை தந்து ஆடை வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment