Friday, December 2, 2011

மனைவியை கொன்ற பிரபல பாதாள உலகத் தலைவன் காணமல் போயுள்ளான்.

பல்வேறு கொலை , கொள்ளைச் சம்பவங்ளுடன் தொடர்புடைய மொஹமட் ஜலீல் மொஹமட் பெரோஸ் எனப்படும் பெரோஸ் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரோஸ் நேற்று வியாழக்கிழமை நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தொன்றில் காலொன்றினை இழந்துள்ள பெரோஸ் பத்துக்கும் மேற்பட்ட படுகொலைகள் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் பெரோஸிற்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவன் தனது மனைவியை சயனைட் ஊசி ஏற்றி கொலை செய்தவன் என்பதும் இவனுக்கு இரு குழந்தைகள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கொழும்பு நீதிமன்றில் குண்டொன்று வெடித்த விவகாரத்திலும் இவனுக்கு தொடர்பு உண்டென்று கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment