Thursday, November 17, 2011

இலங்கையில் 1431 எச்.ஐ.வி யினால் பாதிப்பு

இலங்கையில் எச்.ஐ.வி யினால் தாக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்திற்கு இணைவாக எச்.ஐ.வி நோயாளர்களின் தொகை அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது. தற்போது ஆயிரத்து 431 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வருடத்தின் முதல் காலாண்டில் மட்டும் 43 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். எச்.ஐ.வி யினால் தாக்கப்பட்ட 1431 பேரில் 844 பேர் ஆண்கள் என தேசிய எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது. 587 பெண்களும் இந்நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாகவே நோயாளிகள் தொகை அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment