Sunday, July 10, 2011

மட்டக்களப்பில் கைத்துப்பாக்கியுடன் இளைஞர் கைது.

மோட்டார் சைக்கிளில் இரகசியமான முறையில் சிறியரக கைத்துப்பாக்கியொன்றையும் அதற்கு பயன்படுத்தப்படும் ஏழு ரவைகளையும் மறைத்து வைத்திருந்த இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பொலிஸ் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கியொன்றை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபரிடம் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment