Wednesday, July 20, 2011

கிளிநொச்சியில் மாணவி கர்ப்பம்; சந்தேக நபருக்கு 25 வரை மறியல்

கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பமுற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மாணவி கடந்த 5 ஆம் திகதி பாடசாலையில் மயக்கமடைந்ததை அடுத்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது அவர் கர்ப்பமடைந்துள்ளார் என்பது தெரிய வந்தது. சம்பவம் கிளிநொச்சி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டு இந்தக் கர்ப்பம் தொடர் புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராசா தயாகரன் என்ற சந்தேக நபரைக் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment