Thursday, January 13, 2011

தம்பிலுவிலில் வாகன விபத்து. சாரதி நையப்புடைப்பு.

கிழக்கு மாகாண த்தின் பெரும்பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில் இன்று பிற்பகல் அங்கு கட்டளையை மீறிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முன்னால் மக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதியில் அதிவேகத்தில்வந்த வான் ஒன்று பாதசாரிகள் கடவையில் சென்றுகொண்டிருந்த ஒருவர் மீது மோதியதில் ஒருவர் கா யமடைந்து அவசர சிகிச்கைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாரதியை நையப்புடைத்து பொலிஸாரிடம் பாரமளித்துள்ளனர். சாரதி குனேசன் பவன் என தெரியவருகின்றது. அவரது வாகனமும் மக்களால் தாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment