Friday, May 7, 2010

வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புக்கள் இன்றியே வன்னியில் மீள்குடியேற்றம்: ஐ.நா.

வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமலேயே வன்னியில் தமிழர்கள் மீள் குடியமர்த்தப்படுவதாக இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புஹ்னே கவலை தெரிவித்துள்ளார். அரசு மீளக்குடியேறுபவர்களுக்கு வழங்கும் நிதியுதவி மிகத் தாமதமாகவே அவர்களைச் சென்றடைவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் மேலும் கூறியதாவது:

இடம் பெயர்ந்த மக்கள் தமது பகுதிகளுக்கு மீண்டும் செல்லும்போது அவர்களுக்குத் தொழில்வாய்ப்புகள் இருப்பது மிக முக்கியமானது.இதன்மூலமே அவர்கள் தமது காலில் தாங்கள் நிற்கக் கூடிய நிலையை உருவாக்கலாம்.

எனினும் இவர்கள் வருமானம், உழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையிலேயே மீளக் குடியேற்றப்படுகின்றனர். மீளக் குடியேறும் மக்களுக்கான பொருளாதார அடிப்படையை மீளக் கட்டியெழுப்புவதற்காக சந்தைகள், பாடசாலைகள், சுகாதார நிலையங்களை ஏற்படுத்த வேண்டும். எனினும், இதற்கு குறிப்பிடத்தக்க காலமும், எதிர்வரும் வருடங்களில் எமது சக நிறுவனங்களின் தீவிர முயற்சியும் தேவைப்படும்.

துரித புனர்வாழ்வு, மீள் எழுச்சித் திட்டத்தில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவது குறித்தும் ஐ.நா. கவனம் செலுத்துகின்றது என்றார்.

No comments:

Post a Comment