Friday, May 21, 2010

இ‌ந்‌திய கடற்படை ரகசியங்களை விற்றவ‌ர் ல‌ண்ட‌னி‌ல் கைது

கட‌ற்படை ர‌க‌சிய‌ங்களை ‌வி‌ற்றதாக ல‌ண்ட‌னி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள மு‌க்‌கிய கு‌ற்றவா‌ளியை இ‌ந்‌தியா கொ‌ண்டு வர நடவடி‌க்கை எடு‌த்து வருவதாக ‌சி.பி.ஐ இய‌க்குந‌ர் அ‌ஸ்‌வி‌‌னி குமா‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர். கடற்படை குறித்த ரகசிய தகவல்களை ஆயுத வியாபாரிகளுக்கு விற்றதாக, கடந்த 2006ம் ஆண்டு, கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் சிலருக்கு எதிராக குற்றச்சா‌ற்று எழுந்தது.

இதில், அப்போதைய கடற்படை தளபதி அருண் பிரகாஷின் நெருங்கிய உறவினர் ரவிசங்கரன் உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. ரவிசங்கரன் தலைமறைவானதால், அவர் சர்வதேச காவ‌ல்துறை மூலம் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில், லண்டனில் ர‌‌விச‌ங்கரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்து‌ள்ளன‌ர். அவரை விரைவில் இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக சி.பி.ஐ. இய‌க்குந‌ர் அஸ்வினி குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment