இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போற்குற்றங்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு ஆலோசனைக்குழு அமைக்கும் திட்டத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கிடப்பில் போட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கைக்கு அடுத்தவார வாக்கில் பயணம் மேற்கொள்ளும் ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான பிரதிநிதி பெஸ்கோ, இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது.
பெஸ்கோவின் பயணத்திற்கு பின்னரே, இலங்கையின் போர்குற்றம் தொடர்பாக ஆலோசனைக்குழு அமைப்பதற்கு பான்கீமூன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை இலங்கை அரசால் பலதடவை இந்த ஆலோசனை குழு அமைக்கும் விவகாரத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது தெரிந்ததே.
No comments:
Post a Comment