காத்மாண்டு, மே 22: தில்லியைச் சேர்ந்த 16 வயது மாணவன் அர்ஜுன் பாஜ்பேயி, எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு சாதனை புரிந்துள்ளார். உலகின் அதிக உயரமான 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட்டின் உச்சியைத் தொட்டு சாதனை புரிந்துள்ளார்.
மிகச் சிறிய வயதில் எவெரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட இந்தியர் என்ற பெருமையை அர்ஜுன் பாஜ்பேயி பெற்றுள்ளார். சனிக்கிழமை காலை நேபாளம் வழியாகச் செல்லும் பாதையில் சென்று உச்சியைத் தொட்டுள்ளார்.
இதற்கு முன்னர், நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா தெம்பா தனது 16-வது வயதில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு சாதனை புரிந்துள்ளார். அந்த சாதனையை தற்போது அர்ஜுன் பாஜ்பேயி எட்டியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜோர்டான் ரொமேரோ என்ற சிறுவன் மிகவும் கடினமான பாதையான திபெத் வழியாக எவெரெஸ்ட் சிகரத்தைத் தொட்டார். இவருக்கு வயது 13 என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் உள்ள அனைத்து சிகரங்களையும் தொட வேண்டும் என்துதான் ரொமேரோவின் விருப்பமாம்.
சனிக்கிழமை காலை 6.33 அளவில் எவெரெஸ்ட் சிகரத்தைத் தொட்டார் அர்ஜுன். பின்னர் சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு பின்னர் கீழிறங்கினார். இவருடன் 50 வயதான அபா ஷெர்பாவும் துணைக்குச் சென்றிருந்தார். மலையேற்ற வீரரான அபா, தற்போது 20-வது முறையாக உச்சியைத் தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டவர் என்ற பெருமையை இவர் தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
இவர்களுடன் மற்றொரு மலையேற்ற வீராங்கனை மம்தா சோதா-வும் சென்றார். இவர் உச்சியை 10.24-க்கு சென்றடைந்தார். இவர்கள் மலை உச்சியை எட்டிய விவரத்தை ஆசிய மலையேற்ற வீரர்கள் குழு உறுதி செய்துள்ளது.
No comments:
Post a Comment