Monday, April 26, 2010

இலங்கையில் திரைப்பட விழா: தமிழர்களின் உணர்வை மதிப்பேன்- அமிதாப்

இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியப் பட விழாவில் அமிதாப் பச்சன் கலந்து கொள்ளக் கூடாது என நாம் தமிழர் இயக்கம் உள்பட பல்வேறு தமிழக கட்சிகள் தெரிவித்த எதிர்ப்பைத் தொடர்ந்து, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பேன் என அமிதாப் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியப் பட விழாவில் அமிதாப் பச்சன் கலந்து கொள்ளக் கூடாது என்று இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தின் மும்பை பிரிவைச் சேர்ந்தவர்கள் மும்பையிலுள்ள அமிதாப் பச்சன் வீட்டு முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அத்துடன் மதிமுக உள்ளிட்ட பல்வேறு தமிழக கட்சித் தலைவர்களும், தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களும் அமிதாப் இவ்விழாவில் கலந்துகொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பேன் என்று அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறிருப்பதாவது:

"தமிழக குழுவினர் எனது வீட்டை முற்றுகையிட்டனர். இலங்கையில் இந்திய சர்வதேச பட விழாவை நடத்தக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த விழாவை நடத்தக் கூடிய அமைப்பினர் என்னைக் கேட்டுக்கொண்டதால் அதற்கான ஏற்பாட்டை நான் செய்தேன்.நான் சர்வதேச இந்திய படக்குழுவின் விளம்பரத் தூதராக இருப்பதால் என்னை அணுகினர்.

என்னை பொறுத்தவரை எல்லோருடைய உணர்வுகளுக்கும் கட்டாயம் மதிப்பு அளிப்பேன். அமைதி, அன்பு, புரிந்துணர்வு ஏற்பட முயற்சிப்பேன்" என்று அதில் கூறியுள்ளார்.

1 comment:

  1. Politics is entirely a different matter from acting career or film industry.Experienced film genius
    Amitha Bachchan should respect the film industry of Srilanka.Sovereinity
    of Srilanka.Petty politicians of TamilNadu,they do their business as usual in this matter.

    ReplyDelete