நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர் இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கின்ஸ்லி (52), நாராயண லங்கா (44), ஏ.டபிள்யூ. டி. நிர்மல் (44), தன்னல்வாலா (54), ஆரியசிங்க ( 52) என தெரியவருகின்றது.
நடுக்கடலில் கைது செய்யப்பட்ட அவர்களை தமது விசைப்படகுடன் சென்னை துறைமுகத்துக்கு அழைத்துச் சென்ற இந்திய கரையோர காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment