ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்படவேண்டும் என தொடர்ச்சியாக குரல் கொடுத்துவரும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி பிறேமதாஸவின் புதல்வருமான சஜித் பிறேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் மாற்றம் கொண்டுவரும் வரை கட்சிக்கு வெற்றி கிடைக்காது என தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியினுள் பதவிகளில் மாற்றங்கள் இடம்பெற்று வரும் இத்தருணத்தில் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை அவர் இலக்கு வைத்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment