Friday, April 23, 2010

இந்தியா செல்வோருக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியத் தலைநகர் புது டெல்லியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதற்கான அறிகுறிகள் அதிகரித்திருப்பதால் அமெரிக்கா, பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் அல்லது அங்கு வசிக்கும் அமெரிக்கர்கள் விழிப்புடன் இருக்குமாறு அமெரிக்க அரசாங்கம் ஆலோனை விடுத்துள்ளது.

பயங்கரவாத மிரட்டல் இருப்பதாகவும் அதனால் புதுடெல்லியில் போலிசார் விழிப்பு நிலையில் இருப்பதாகவும் டில்லி போலிஸ் உயர் அதிகாரி தட்வால் தெரிவித்திருப்பதாக ராய்ட்டர்ஸ் தகவல் கூறியது. புதுடில்லியில் சுற்றுலா பயணிகள் நாடி வரும் குறிப்பிட்ட சில இடங்களை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அரசாங்கமும் அந்நாட்டு மக்களுக்கு பயண ஆலோசனை விடுத்துள்ளது.
பெங்களூரில் கிரிக்கெட் விளையாட்டரங்கத்திற்கு வெளியில் சென்ற வாரம் குண்டு வெடித்ததையடுத்து அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் இந்த பயண எச்சரிக்கையை விடுத்துள்ளன. புதுடெல்லியில் முக்கிய பேரங்காடிப் பகுதிகளைக் குறிவைத்து கடந்த காலங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment