Tuesday, April 27, 2010

ஜி 15 நாடுகளின் தலைவர் பதவியில் மஹிந்த ராஜபக்ச?

ஜி 15 நாடுகளின் தலைமைப் பதவியை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச ஏற்றுக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த பதவி ஈரான் நாட்டு ஜனாதிபதி முகமத் அகமது நிஜாத் வசம் உள்ளது.

இந்த நிலையில், வரும் மே மாதம் 17 ஆம் தேதி தெஹ்ரானில் நடைபெறவுள்ள ஜி 15 நாடுகளின் மாநாட்டின் போது அவருக்கு இந்த பதவி வழங்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

1989 ஆம் ஆண்டு ஜி 15 நாடுகள் குழு உருவாக்கப்பட்டது. தற்போது இதில் 17 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

அல்ஜீரியா, அர்ஜென்டீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ஜமைக்கா, கென்யா, மலேசியா, மெக்சிகோ, நைஜீரியா, சினேகல், இலங்கை, வெனிசுலா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்த மாநாடு நடத்தப்படுகிறது.தற்போது இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, "சார்க்" நாடுகளின் தலைவர் பதவியையும் வகிக்கிப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment