இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசிடம் ஆலோசனை குழு வழங்கிய அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நளினி விடுதலை தொடர்பான ஆலோசனை குழு அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்தது.
அப்போது, ஆலோசனை குழு அறிக்கை மீதான முடிவை வரும் 29ஆம் தேதி தெரிவிப்பதாக தமிழக அரசு கூறியது. அரசின் இந்த பதிலை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
No comments:
Post a Comment