இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய தேசிய கூட்டணி சார்பில் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சோ முன்நிறுத்தப்படின் தாம் கூறும் நான்கு விடயங்களை ஜெனரல் சரத் பொன்சேகா ஏற்றுக்கொள்வாரேயானால் அவரை ஆதரிப்பதற்கு தாம் தாயராக இருப்பதாக ஜனநாய மக்கள் முன்னியின் தலைவர் மனோ கணேசன் இந்திய விகடன் சஞ்சிகைக்கு தெரிவித்துள்ளார். அவர் சஞ்சிகைக்கு தெரிவித்துள்ளதாவது, ''வவுனியாவில் முள்வேலிக்குள் அடைபட்டுக்கிடக்கும் மக்களை அவர்களது சொந்த இடத்தில் மீள் குடியமர்த்துவது, தமிழர்களின் பாரம்பரிய இடங்களில் சிங்கள ஆக்கிரமிப்பைத் தடுத்துக் குடியேற்றத்தைச் சிதைக்காமல் செய்வது, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வது, இலங்கையில் நிகழும் தேசிய இனப்படுகொலையைத் தடுக்க முயல்வது போன்ற விஷயங்களில் சரத் பொன்சேகா சாதகமாக பதிலளித்தால்... அவரைப் பொது வேட்பாளராக ஆதரிக்க நாங்கள் தயார்!'' என்றார்.
இந்நிலையில் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பத்திரிகையாளர்கள், பொன்சேகா பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவது குறித்துக் கேட்டனர். ''பொதுவேட்பாளரை களத்தில் நிறுத்துவதில் எனக்கு சம்மதம்தான். பொன்சேகா பொதுவேட்பாளராக வேண்டுமென்றால், அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி-பியும் ஒத்துழைக்க வேண்டும். அதுவுமில்லாமல் பொன்சேகா தமிழ் மக்கள் தொடர்பான தனது நிலைப்பாட்டை விளக்குவதோடு, அவர்களுக்குத் திருப்தி அளிக்கக்கூடிய வாக்குறுதிகளையும் அளிக்க வேண்டும்!'' என்று சொல்லியிருக்கிறார்.
No comments:
Post a Comment