Tuesday, November 10, 2009

இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகில் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள்.

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம்கோரச் செல்கையில் இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள படகில் உள்ள 78 பேரில் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் காணப்படுவதாக இந்தோனேசியாவிற்கான இலங்கை உயரிஸ்தானிகர் மேஜர் ஜெனரல் நந்தன மல்லவாராச்சி தெரிவித்துள்ளார்.

படகில் உள்ளவர்களின் படங்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து அங்கு காணப்படும் புலிகள் பலரை தான் இனம் கண்டு கொண்டுள்ளதாகவும், அவர்களின் பதவி நிலைகள் தொடர்பாக இதுவரை எதுவும் தெளிவாகவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment