Monday, November 2, 2009

32 வது பொலிஸ் மா அதிபாராக மஹிந்த பாலசூரியா நியமனம்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 32 வது பொலிஸ் மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை உத்தியோக பூர்வமாக பதவிப்பிரமானம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1978ம் ஆண்டு உதவி பொலிஸ் அத்திட்சகராக பொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொண்டதுடன், 31 வருட கால பொலிஸ் சேவையில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

இவர் வட-கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியுள்ளதுடன், விசேட அதிரடிப் படையின் சிறப்புத் தளபதியாக கடந்த 2007.09.23 லிருந்து கடமையாற்றி வந்தார். தற்போது அரசியல் விஞ்ஞானத்துறையில் பேராதெனிய பல்கலைக் கழகத்தில் கலாநிதி பட்டத்திற்காக தனது கல்வியைத் தொடர்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment