பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தனக்கு அரசியலில் நுழையும் ஆர்வம் இல்லை என அததெரண விற்கு வழங்கியுள்ள விசேட நேர்காணலில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் திரு. கோத்தபாய ராஜபக்ச அவர்கள் போட்டியிடவுள்ளதாக வெளியாகியிருந்த செய்திகள் தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், நாடு சிக்கல் நிலையை எதிர்கொண்டிருந்தபோது பயங்கரவாதத்தை இப்பூமியில் இருந்து பூண்டோடு அழிப்பதற்காக மக்களால் வழங்கப்பட்டிருந்த ஆணையை நிறைவேற்றியுள்ளதாகவும், அதற்கு அப்பால் எவ்வித அரசியல் நோக்கங்களும் தன்னிடம் இல்லை என தெரிவித்துள்ள அவர், யுத்தத்தினால் அங்கவீனர்களாகியுள்ள படைவீரர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதே தனது தற்போதைய இலக்கு எனவும் அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment