ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டதிட்டங்களின் வழி இலங்கை செயற்படாத போது அது, ஐரோப்பிய ஒன்றித்தின் வரிச் சலுகையை கேட்கவோ அன்றில் வைத்திருக்வோ முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான பிரதிநிதி Bernard Savage தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி சலுகைகளை பெறுகின்ற நாடுகள், ஐரோப்பிய ஒன்றித்தின் மனித உரிமைச் சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதுடன் தேவை ஏற்படின் நியாமான விசாரணைகளுக்கு இடம்விடவேண்டும் எனவும் வேண்டப்பட்டுள்ளனர். ஆகவே மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு இசைவாக செயற்படாதபோது ஜிஎஸ்பி வரிச்சலுகையை வைத்துக் கொள்வதற்கு இலங்கைக்கு உரிமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையே ஜிஎஸ்பி வரிச் சலுகைக்கு விண்ணப்பித்துள்ளது. அத்துடன் அவர்களுக்கு அதன் நிபந்தனைகளும் சட்டதிட்டங்களும் நன்றாக தெரியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment