Monday, September 14, 2009

தேர்தல் சட்டதிட்டங்கள் அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்பட முடியாதவையா? ரஞ்சன்.

இலங்கை தேர்தல் சட்டதிட்டங்கள் ஆளும் கட்சி மீது பிரயோகிக்கப்பட முடியாதவையா என சப்ரகமூவ மாகாண சபையின் எதிர்கட்சித்தலைவர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். தான் சப்ரகமுவ தேர்தலில் ஈடுபட்டிருந்தபோத தேர்தல் காலங்களில் தனது நாடகங்கள், மற்றும் திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புச் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டிதாக குறிப்பிடும் அவர், தென்மாகாண சபைத் தேர்தலில் ஐ.ம.சு முன்னணி சார்பாக பங்கு கொள்ளும் வேட்பாளர்களான அனர்கலி மற்றும் சுசந்தா ஆகியோரது நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் அரச வானொலி மற்றும தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒளி, ஒலி பரப்பப்படுவதாகவும் அது அவர்களின் பிரச்சாரத்திற்கு உதவியாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் பகிரங்கமான பதில் ஒன்றை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment