Monday, October 4, 2021

OCT 04. பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டிக்கு பாதயாத்திரை சென்ற JR ஐ யாழ்பாணத்தில் தேரில் இழுத்தனர்.

இன்று ஒக்டோபர் மாதம் 04ம் திகதி. இலங்கையின் நீண்ட தமிழ் - சிங்கள அரசியல் பிரச்சனையின் முக்கிய நிகழ்வு நடந்த தினம். 1957இல் பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாச்சிடப்பட்டது. இன்றுவரை தமிழர் பிரச்னைசம்பந்தமாக இரண்டு தரப்பாராலும் எற்றுக்கோள்ளப்பட்டவைகளில் சிறந்தது என்று கருதப்படுகிறது.

ராஜீவ்- ஜேஆர் ஒப்பந்தமும், அதன் விளைவான 13 திருத்தச் சட்டம் - மாகாணசபைகள் உருவாக்கம் என்பவற்றிற்றை விடவும் சிறந்தது என நம்பப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெ ஆர் ஜெயவர்த்தானா ஒக்டோபர் மாதம் 04ம் திகதி கண்டிக்குப் பாதயாத்திரை செய்தார். இதனை இடையில் வைத்து அன்றைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (SLFP) பாராளுமன்ற உறுப்பினர் எஸ் டி பண்டாரநாயக்க இடையில் வைத்து அடித்துக் குளப்பினார்.

1965இல் திரு எஸ் ஜே வி செல்வநாயகம் டட்லியுடன் பேசி இணைந்து அரசமைத்தார். தமிழரசுக் கட்சியின் சார்பில் மு திருச்செல்வம் QC அவர்கள் உள்ளூராட்சி அமைச்சரானார். இந்த காலத்தில் 1966ம் ஆண்டு தமிழரசு வாலிப முன்னணி மாநாடு மாவிட்டபுரத்தில் நடந்தது. மாநாட்டின் இறுதியில் பொதுக் கூட்டம் காங்கேசன்துறைக்கு கடற்கரையில் நடந்தது. இந்தக் கூட்டத்தின் சிறப்பு அதிதியாக அன்றைய UNP துணைத் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான ஜே ஆர் ஜெயவர்த்தனா தமிழரசுச் சின்னமான வீடு மாதிரி தேர் கட்டி செல்வநாயகத்தையும் ஜே யாரையும் இருத்தி, யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறவரை மக்கள் உற்சாகத்துடன் இழுத்துவந்தார்கள். 10 மணித்தியாலம் இந்த ஊர்வலம் நடந்ததாகச் சொல்லப்பட்டது.

ஜே ஆர் ஜெயவர்த்தனாவை அழைக்க வேண்டிய தேவையோ அல்லது இப்படி தேர்கட்டி இழுக்க வேண்டிய தேவையோ தமிழரசுக் கட்சிக்கு ஏன் ஏற்பட்டது? கண்டிக்குப் பாதயாத்திரை போனவருக்கு எவ்வளவு கவுரவம்? இலங்கைத் தமிழர் சரித்திரம் இப்படித்தான் எப்போதும் இருந்தது. அது இனியும் மாறும் போலத் தெரியவில்லை.

கேள்வி: இந்தச் சம்பவத்தை தமிழ் தேசியம் பேசுபவர்கள் / விமர்சகர்கள் எங்கேயாவது எழுதலாமே?

குறிப்பு: இந்த மாநாட்டில் தான் இன்றைய தமிழரசுத் தலைவர் மாவை சேனாதிராஜா கட்சியின் தேசிய அரசியலுக்குள் வந்தார்.

Genga Nagalingam Srigengatharan னின் பதிவிலிருந்து..

No comments:

Post a Comment