Wednesday, March 25, 2020

ஸ்கைப்பூடாக வழக்கு விசாரணை செய்து 18 பேருக்கு பிணை வழங்கியது காலி நீதிமன்று!

கொரோணா வைரசினால் நாடு ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில், சிறைச்சாலைகளில் நெருக்கடி தோன்றியுள்ளதுடன் தொற்றுக்குள்ளாகும் ஆபத்தும் அதிகரித்துவருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் சம்பந்தமான வழக்குகள் ஸ்கைப் இணையவழியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன் சிறு குற்றங்களை புரிந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிணை வழங்கப்பட்டவர்களில் 16 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர்.


இவ்வழிமுறையைப் பயன்படுத்தி எதிர்வரும் நாட்களில் மேலும் சில நீதிமன்றுகளும் வழக்குகளை விசாரணை செய்து சிறைச்சாலையினுள் அடைந்துவைத்துள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க முனையலாம் என தெரியவருகின்றது.

காலிச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறை மற்றும் விளக்கமறியல் கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment