இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர், மத்திய, சப்ரகமுவ, மேற்கு, ஊவா மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு காலை வேளையில் பனியுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே இன்று அதிக வெப்பநிலையை இரத்தினபுரி பிரதேசத்தில் அவதானிக்கலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
No comments:
Post a Comment