நல்லாட்சியை நிலைநாட்டுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், நாட்டில் ஜனநாயகத்தையே இல்லாது செய்துள்ளார்கள் என போது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியள்ளார். கடந்த தினங்களில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பன்னங்கண்டிப் பிரதேசத்திற்கு, இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் புனரமைப்பு செய்து, மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்த நாமல் ராஜபக்ச, இந்த பணிகளுக்காக இளைஞர் அமைப்பொன்றும் தம்முடன் இணைந்துக் கொண்டதாக கூறினார்.
கிளிநொச்சிக்கு இன்று வந்துள்ளோம். இந்தப் பணியை நாம் தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளோம். இந்தப் பகுதி மட்டுமன்றி, ஏனைய பகுதிகளுக்கும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளோம்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நினைத்திருந்தால், வடக்கில் பல்வேறு முன்னேற்றகரமான அபிவிருத்தி பணிகளை மேகொண்டிருக்க முடியும். எனினும் அவர் மக்களை நன்கு ஏமாற்றி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறினார்.
வடக்கு மக்கள் மட்டுமன்றி, தெற்கில் உள்ளவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருட்படுத்தவில்லையென கூறிய நாமல் ராஜபக்ச, விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதை மக்கள் அரசாங்கத்திடம் வலியுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.
நல்லாட்சி என்று கூறிக் கொண்டு வந்தவர்கள், இப்போது நாட்டின் ஜனநாயகத்தையே சீர்குலைத்து விட்டனர். இனியொருமுறை இந்த தவறு இடம்பெற கூடாது என்றால், முதலில் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கிளிநொச்சி மக்களிடம் கேட்டு கொண்டார்.
No comments:
Post a Comment