பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் சிதைந்த குரல் பதிவை உள்ளடக்கிய இறுவட்டு, இன்று நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கிய குரல் பதிவை பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனம் இன்று நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த இறுவட்டை அரச இரசாயன திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
இதேவேளை இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்வதாக நீதவான் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment