Thursday, March 6, 2014

உள்ளக பொறிமுறைமை மூலம் நிரந்தர தீர்வு எட்டுவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும்- தென் ஆபிரிக்கா


இலங்கையில் உள்ளக பொறிமுறைமை ஒன்றின் மூலம் நிரந்தரமான தீர்வுத் திட்டம் ஒன்றை எட்டுவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25ஆம் அமர்வில் உரையாற்றிய தென் ஆபிரிக்க சர்வதேச விவகார அமைச்சர் எமலி நிகோனா மாஷபானே தெரிவித்துள்ளார்.

மேலும் மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் சில காலமாக தேங்கிக் கிடப்பதாகத் தெரிவித்துள்ளார் உள்ளக பொறிமுறைமை ஒன்றை அமைத்து அதன் மூலம் தீர்வுகளை எட்ட இலங்கைக்கு சர்வதேச சமூகம் வாய்ப்புக்களை வழங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். 

இதனை விட எமது பிரச்சினைகளுக்கு நாமே உள்ளக பொறிமுறைமை ஒன்றின் மூலம் தீர்வுகளை எட்டினோம் எனவே இலங்கையும் அப்படியான ஒரு பொறிமுறை மூலம் தீர்வு திட்டத்தை எட்டும் என நம்புவதாகவும் எனவே இலங்கையும் உள்ளக பொறிமுறைமை ஒன்றின் மூலம் நிரந்தரமான தீர்வுத் திட்டம் ஒன்றை எட்டுவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment