Friday, March 7, 2014

அப்பாடா… துரத்தினாலும் அரசாங்கத்திலிருந்து செல்லாமலிருக்க தீர்மானம் கொண்டதே முஸ்லிம் காங்கிரஸ்!

தங்கள் கட்சி மீது அரசாங்கம் வைத்துள்ள தப்பபிராயத்தை நீக்கி, அரசாங்கத்துடன் ஒற்றுமையாக செயற்படுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரீ. ஹஸன் அலி குறிப்பிடும்போது, கட்சி உடனடியாக்க் கூடி எடுத்த முடிவில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்கிறார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை, இலங்கை வந்த சமயம் அவரிடம் ரவூப் ஹக்கீமிடம் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி வினவியுள்ளார்.

அவ்வமயம் ரவூப் ஹக்கீம், யுத்த்த்தினால் 20 000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக மாறியிருப்பதாகவும், ஆயிரக் கணக்கில் முஸ்லிம் இறந்துள்ளதாகவும் ஹக்கீம் குறிப்பிட்டதாக ஹஸன் அலி குறிப்பிடுகிறார்.

நிர்க்கதிக்குள்ளான முஸ்லிம்கள் பற்றி அரசாங்கத்திற்கு தெளிவுறுத்தியிருப்பதாகவும் நவநீதம் பிள்ளையிடம் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

No comments:

Post a Comment