யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்தல் நேற்றையதினம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதுடன் இதில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 24 வாக்குகளையும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி குணசீலன் 16 வாக்குகளையும், யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர் விக்னேஷ்வரன் 13 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இவ்வாறு போட்டியிட்ட 5 பேரில் அதிகூடிய வாக்குகளை பெற்ற மூவரின் பெயர்களை பல்கலைக்கழக பேரவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பதுடன் மானியங்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவிக்கும் என்பதுடன் இதில் ஒருவரை ஜனாதிபதி, யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணை வேந்தராக நியமனம் வழங்குவார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ்த் தேசியம் தொடர்பான செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் மறைமுக தடைகளை ஏற்படுத்தியதோடு கடந்த வருடம் மாவீரர் நாளை மாணவர்கள் அனுஸ்டிக்க முடியாத வகையில் நீண்ட விடுமுறையை அளித்தவர் என்று துணைவேந்தர் மீது மாணவர்கள் அதிப்தி கொண்டிருந்த நிலையில் இன்று அவர் மீண்டும் துணைவேந்தர் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.
.jpg)
No comments:
Post a Comment