Sunday, March 2, 2014

எல்.ரி.ரி.ஈ யினால் முறியடிக்கப்பட்ட மனித உரிமை, அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டதே அன்றி மீறப்படவில்லை – சரத்

30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளினால் முறியடிக்கப்பட்ட மனித உரிமை, அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டதே அன்றி, பயங்கரவாதத்தை ஒழித்ததன் பின்னர், இலங்கையில் எம்முறையும் மனித உரிமைகளை மீறிய செயற்பாடுகள் இடம்பெறவில்லையென, சிரேஸ்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, சர்வதேசத்திற்கு தெரிவித்துள்ளார்.

சிரேஸ்ட அமைச்சரும், பிரதி நிதியமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம, இந்தியாவில் இடம்பெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் உரையாற்றும், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை, புலம்பெயர் தமிழர் அமைப்பிற்கு தாங்கிக்கொள்ள முடியாத அதிர்ச்சியையும், கவலையும் ஏற்படுத்தியுள்ளதாக, அமைச்சர் சுட்டிக்காட்டினார். சர்வதேச மட்டத்தில் இலங்கை தொடர்பில், தவறான அபிப்பிரயாங்களை பரப்பி வருவதாகவும், அவர் கூறினார்.

நாட்டை ஆட்டங்காணச் செய்வதே, இவர்களது நோக்கமாகும். கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்தி, சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்தின மக்களின் மனித உரிமைகளை பாதுகாத்து, சமாதானம், சுபீட்சத்தை, இலங்கை அரசாங்கம் எட்டியுள்ளது, அரசாங்கம் சகல சந்தர்ப்பங்களிலும் நெகிழ்வுத்தன்மையுடன் செயற்பட்டு, மக்களின் நலன்கருதியே தீர்மானங்களை எடுப்பதாகவும், சிரேஸ்ட அமைச்சர் சரத் அமுனுகம இம்மாநாட்டில் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment