இலங்கைக்கு எதிராக மனித உரிமை குற்றச்சாட்டுக்களை சுமத்தும் பிரிட்டிஷ் பிரதமரின் புலி ஆதரவு நடவடிக்கைகள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அம்பலமாகியுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு வருகை தர சில தினங்கள் இருந்த நிலையில் புலிகளுடன் தொடர்புடைய பல தமிழ் அமைப்புக்களை சந்தித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.எல்.ரி.ரி.ஈ அமைப்புடன் நேரடி தொடர்பு வைத்துள்ள சில தமிழர் அமைப்புக்கள் இந்த சந்தி ப்பில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் பாரா ளுமன்ற அலுவலக அறையில் டேவிட் கெமரன் இவ் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.
பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹீயூகோ ஸ்வையிலும் இச்சந்திப்பில் இணைந்துள்ளார். எல்.ரி.ரி.ஈயினருக்கு ஆதரவு வழங்கும் தமிழ் அமைப்புக்களின் கருத்துக்கள் மற்றும் தூண்டுதல்களின் பேரில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு பிரிட்டிஷ் பிரதமர் செயற்பட்டுள்ளமை இந்த இரகசிய பேச்சுவார்த்தைகள் மூலம் தெளிவாகின்றது என வெளியுறவு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இலங்கையில் சுதந்திரம் மற்றும் அமைதி சூழலின் கீழ் சகல இன மக்களினதும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும் விதத்தை கவனத்திற் கொள்ளாமல் பிரிட்டிஷ் பிரதமர் செயற்பட்டாரா அல்லது தமிழ் அமைப்புக்களின் வற்புறுத்தலாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment