Wednesday, February 12, 2014

புலிப் புலனாய்வு உறுப்பினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்னணி புலனாய்வுத்துறை உறுப்பினராக இருந்த ஒருவர் மலேசியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.


சிவராசா சுதாகரன் என்ற விடுதலைப் புலிகளின் முன்னணி புலனாய்வுப் பிரிவு உறுப்பினர், நேற்று முன்தினம் மலேசியாவுக்கு விமானத்தில் பயணம் செய்யவிருந்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் விடுதலைப் புலிகளின் இரண்டு பிரதான புலனாய்வுத்துறை உறுப்பினர்களான முத்தப்பன், ஞானவேல் ஆகியோருடன் நீண்டகாலம் தொடர்பை பேணி வந்தவர் என்றும் இவர் பலாலி தெற்கை வசிப்பிடமாக கொண்டிருந்தவர் என்றும் இலங்கை பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் தற்போது இலங்கை பொலிஸின் தீவிரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

இதற்கிடையே விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரிப்பில் ஈடுபட்டவர் என கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இன்னொரு விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபரான ஜெயகுமரன் முனீஸ்வரகுமரன் என்பவரும் இலங்கை பொலிஸாரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் இவர்கள் வைக்கப்பட்டுள்ளார்கள் என இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment