Wednesday, February 12, 2014

தவறான பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கையர் கைது! மலேசியாவில் சம்பவம்

மலேசியா - கோலாலம்பூரில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் இருந்து இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் அளவில் உயிரிழந்திருக்கலாம் என கோலாலம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். ஒருபாலின நடவடிக்கையில் ஈடுபட முயற்சித்த வேளை குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எனினும் அவர் கொலை செய்யப்பட்டாரா என விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸார் கூறினர். ஆனால் அவருடைய அறையில் கூறிய ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 34 வயதுடைய இலங்கை பிரஜை சடலமாக மீட்கப்பட்டபோது படுக்கை அறையில் அரை நிர்வாண கோலத்தில் இருந்ததாக தெரியவருகிறது.

அறையின் உள்ளே பூட்டு போடப்பட்டிருந்ததாகவும் கதவை உடைத்து உள்சென்றே சடலம் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (ADT)

No comments:

Post a Comment