Sunday, February 23, 2014

அது என்ன தீப்பந்தம் உள்ள கட்சி? - வினா தொடுக்கிறார் சஜித் த வாஸ்

“ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவதற்கு சிந்தித்துக்கொண்டு எதிர்க்கட்சியினர் சூட்சுமங்கள் ஒவ்வொன்றாய்ச் செய்துவருகின்றனர். உண்மையிலேயே அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, இந்நாட்டை ஆட்சி செய்யக்கூடியவர் யார்தான் இருக்கின்றார்? அப்படியான ஒருவரை இதுவரை காண்பதற்கும் இல்லை. ஏன் எதிர்க்கட்சியில் அப்படியான ஒருவர் இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? பொதுமக்களுக்கு இது நன்கு தெரியும்” என பலப்பிட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் வெளிநாட்டலுவல்கள் தொடர்பான ஒருங்கிணைப்பாளருமான சஜித் த வாஸ் குணவர்த்தன குறிப்பிட்டார்.

பலப்பிட்டிய சுதந்திரக் கட்சியின் தொகுதிக்கான கூட்டத்திலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துரைக்கும்போது,

“இந்த நிமிடத்தில்கூட நான் சொல்வது என்னவென்றால், எமது கட்சியில் அவநம்பிக்கை வைத்திருந்தவர்கள்கூட தற்போது எங்களைச் சூழ்ந்துகொண்டுள்ளார்கள். அது என்ன தீப்பந்தம் என்ற கட்சி? எனக்கு அக்கட்சியின் பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது கிராமத்தின் கட்சி. ஏழைகளின் கட்சி.

எங்களுக்கு நாட்டைப் போலவே, கிராமமும் மிக முக்கியம். கடந்த 08 வருட காலகட்டத்தில் தனிமனிதனொருவனின் இலாப மட்டம் அதிகரித்திருக்கின்றது. அதேபோல நாட்டில் அபிவிருத்திப் பணிகள் தங்குதடையின்றி நிறையவே நடைபெற்றிருக்கின்றன. மகிந்த சிந்தனையில் 70 வீதமானவை நிறைவேறியுள்ளன. நாட்டு மக்கள் தமது நாட்டுக்கு ஜனாதிபதியொருவரை, அல்லது அமைச்சர் ஒருவரை அதுவும் இல்லாவிட்டால் (பாராளுமன்ற) உறுப்பினர் ஒருவரை நியமிப்பது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக… அவ்வாறான ஒருவர் எதிர்க்கட்சியில் இல்லை. அதனால் இன்று பொதுமக்களுக்கு இம்முறையும் தேர்தலின்போது என்ன செய்ய வேண்டும் என்று நன்கு தெரியும்”
எனவும் தெரிவித்தார்.

(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment