Sunday, February 16, 2014

காதல் தோல்வியால் காதலன் தற்கொலையாம்...! யாழில் சம்பவம்

இன்று (16) காலை யாழ். மானிப்பாய் வீதி, ஓட்டுமடம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் அவரது வீட்டின் முன்புறம் நின்ற மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இத் தற்கொலைக்கு காதலில் ஏற்பட்ட பிரிவே காரணம் எனத் தெரிய வருகிறது. மானிப்பாய் வீதி, ஓட்டுமடத்தைச், சேர்ந்த அரிச்சந்திரன் விக்னேஸ்வரன் (23) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக உறவினர் ஒருவர் தெரிவிக்கையில்,

அயல் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், விக்னேஸ்வரனின் காதல் விவகாரத்திற்கு வீட்டார் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும், இருப்பினும் குறித்த இளைஞன் ஒருவார காலமாக மனம் உடைந்து விரக்தியான மனோநிலையில் காணப்பட்டதாகவும் அதற்கான காரணம் என்ன என்று தங்களுக்கு புரியாத புதிராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், நேற்றிரவு 11.40 மணியளவில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டான் என்றும் கூறினார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். குற்ற, தடய நிபுணத்துவ பொலிஸார் மற்றும் யாழ். நகரப் பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment