Saturday, February 15, 2014

தப்பியோடிய கைதி 17 வருடங்களின் பின்னர் கைது!

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய கைதியொருவர் 17 வருடங்களின் பின்னர் பொலன்னறுவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைதி இன்று அதிகாலை பொலன்னறுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பொலன்னறுவை பொலிஸ் விசேட பணியகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் சுற்றிவளைத்து கைதியை பிடித்துள்ளனர்.

புலஸ்திகம பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு இந்த கைதி தப்பிச் சென்றிருந்தார்.

அதுமுதல் பொலிஸாரை புறக்கணித்து வந்த நிலையில் இன்று அதிகாலை புலஸ்திபுர சங்கபோதிகம பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment