Friday, February 14, 2014

16 ஆவது தேசிய நிழற்பட கண்காட்சி எதிர் வரும் 22 ஆம் திகதி யாழில் ஆரம்பம்; சர்வதேச நாடுகளை செர்ந்த 108 பேரின் புகைப்படங்கள் கண்காட்சியில்!

தேசிய நிழற்பட கண்காட்சி அலுவலகம் எதிர்வரும் 22,23 தினங்களில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் நடத்தவுள்ள 16 ஆவது சர்வதேச புகைப்படக் கண்காட்சியில் 27 நாடுகளைச் சேர்ந்த 108 பேரின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தவுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தனர்.

மேலும் இக்கண்காட்சியில் யாழ்.மாவட்டத்தின் பாடசாலை மாணவர்கள், புகைப்பட கலைஞர்கள், ஊடகவியலாளர்களும் தங்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்சிப்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment