சனிக்கிழமை வின்சர் அதிகாலை நகரின் டவுண்ரவுன் வர்த்தகப் பகுதியில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆயுதத்தோடு காணப்பட்ட ஒருவன் குற்றம் சுமத்தப்பட்டுள்ளான் என்று வின்சர் பொலிஸ் அதிகாரி ஏ. ஐ. பிரெடெரிக் கூறுகிறார். அதிகாலை 2 மணியளவில் பெலிசியர் வீதி மற்றும் பல்கலைக் கழக ஒழுங்கைகு அருகில் கௌதம் (கெவின்) குகதாசன் என்னும் ஸ்கார்ப ரோவைச் சேர்ந்த 19 வயது வின்சர் பல்கலைக் கழக மாணவன் இரண்டு குழுக்களுக்கிடையே இடம் பெற்ற வாய்ச்சண்டையின் பின்னர் மரணமாகியுள்ளான்.ஒரு புளொக் தொடர்பாக தொடர்ந்த மோதல் பலருக்குக்குக் கத்திக்குத்துகளுடன் முடிந்தது. கடந்த 29 வருடங்களில் தான் நினைனத்துப் பார்க்க முடியாத அளவு, பெருந்தொகையான சண்டியர்கள் மற்றும் ஆயுதங்களுடன் காணப்பட்ட மிக வன்முறையான சம்பவம் இது என்று மேற்படி பொலிஸ் அதிகாரி பிரடெரிக் கூறுகிறார். சில சம்பவங்கள் நடந்து கொணடிருந்த போது பொலிஸ் அலுவலர்கள் அந்த இடத்தில் இருந்திருக்கிறார்கள். இது மிகப் பலமான குழப்பம் நிறைந்த காட்சியாகும். பல இடங்களில் கடினமான தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்த போது அவர்கள் பாதிப்புள்ளானவர்களைக் காப்பாற்றுவதில் முனைந்திருந்தனர் என்றும் பிரடெரிக் கூறுகிறார்.
பொது அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலான ஒரு ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 வயதான அலி மஹ்மூத் அகமத் என்பவர் கைது செய்ய ப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுளார்.
இந்த சம்பவம் வரம்பற்றதாக தெரியவில்லை. பலியாகி யவரைத் தவிர, ஒவ்வொரு குழுவிலும் உள்ள பெரும்பாலானோர் வின்சரில் வசிக்கின்றார்கள். அத்துடன் கிட்டத்தட்ட அவர்கள் எல்லோரும் பொலிசுக்கு நன்கு தெரிந்தவர்கள் என்று பிரடெரிக் கூறுகின்றார்.இந்த இரண்டு குழுக்களையும் சேராத தனிப்பட்டவர்கள் இதில் சம்பந்தப் படவில்லை என்று கூறும் பிரடெரிக், சாதாரணமாக இடம் பெறுவதைவிட இது மிகமிக வன்முறையானது. அந்த நேரத்தில் 17 சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் 9 டவுண்ரவுனில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று கூட வன்முறையானதல்ல என்கிறார்.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் இரு குழுவி னரும் பொலிசாருக்கு சிறு ஒத்துழைப்பு வழங்கு கிறர்கள் என்று பொலிசார் கூறுகிறார்கள். விசாரணை செய்யும் அலுவலர்கள், யார் சம்பந்தப்பட்டவர், உண்மையில் என்ன நடந்தது என்று அறிவதற்காக வீடியோக்களை கவனித்துப் பார்க்கிறார்கள்.விசாரணை தொடர்பான யாதேனும் தகவல் தெரிந்தால் இருந்தால் பொலிசுக்கு அறிவிக்கும் படி பொதுமக்களை இன்னும் பொலிசார் கேட்டுக் கொண்டிருக் கிறார்கள். தகவல் தெரிந்தவர்கள் தங்களை அடையாளம் காட்டாமல் பிரதான குற்றப் பிரிவு தொலைபேசி இலக்கம் 519-255-6700 நீட்சி 4390 அல்லது 4830. மற்றும் கிறைம் ஸ்டொப்பர்ஸ்-க்கு 519-258-8477 (TIPS) என்ற எண்ணுடனோ அல்லது www.catchcrooks.com. இணைத்துடனோ தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்டுள்ளனர்.
No comments:
Post a Comment