Thursday, October 24, 2013

வெலிகம அல்கலம் பாலர்பாடசாலையின் பொருட்காட்சி (படங்கள் இணைப்பு)

வெலிகம அல்-கலம் பாலர் பாடசாலையின் பொருட்காட்சி நிகழ்வு இன்று (24) மேற்படி பாலர் பாடசாலையில் இடம் பெற்றது. பொருட்காட்சியை வெலிகம பிரதேச செயலக சிறுவர் உரிமை உத்தியோகத்தர்களான திரு. புத்திக்க ஜயவீர மற்றும் திருமதி. உதேனி ஜயசேக்கர திறந்து வைத்தனர்.

மிகச் சிறப்பாக மேற்படி பாடசாலை ஆசிரியைகளினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் வெலிகம கல்விக் காரியாலய அலுவலர் திருமதி. ஜீ. ஜீ. சிரியாணி உட்பட பிரமுகர்கள், பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் பொருட்காட்சி பார்வைக்கு விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment