Friday, October 11, 2013

அபாய அறிவிப்பு !வடக்கில் மட்டுமல்ல அங்கேயும்!

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் மத்திய மாகாண சபையில் ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் 10 பேர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு எச்சரிக்கை சமிக்ஞை விடுத்துள்ளனர்..

மத்திய மாகாண சபையில் ஆளுங் கட்சிக்கு 40 உறுப்பினர்களும் எதிர்க் கட்சிக்கு 18 உறுப்பினர்களும் இருக்கின்றனர். ஆனால், அண்மையில் மாகாண சபையில் இடம் பெற்ற தலைவர் தேர்தலில் ஆளுங் கட்சிக்கு 29 வாக்குகளும் எதிர்க் கட்சிக்கு 27 வாக்குகளும் கிடைத்துள்ளன. பிரதித் தலைவர் தேர்தலில் ஆளுங் கட்சிக்கு 33 வாக்குகளும் எதிர்க்கட்சிக்கு 24 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதிலிருந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முற்றுமுழுதாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்றது தெரிய வருகின்றது. அத்துடன் வழக்கத்துக்கு மாறாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பிரதமரின் மகன் அனுருத்த ஜயரட்னவுக்கு முதலமைச்சர் பதவி வழங்காது, அவர் பெற்றதிலும் அரைப் பங்கே பெற்ற முன்னாள் முதலமைச்சருக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி வழங்கியதைக் கண்டித்து கடந்த வாரம் ஜனாதிபதிக்கு எதிராக கண்டியில் உத்கோசம் எழுப்பப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.

எவ்வாறாயினும் நம்மவர்கள் 14 பேரும் அங்கு நிச்சயம் அம்பாந்தோட்டை விசுவாசிகளாத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு எலும்புத்துண்டுகள்தான் வேண்டும்.

No comments:

Post a Comment