Sunday, October 13, 2013

யாழ்தேவி ரயில் முன் பாய்ந்து தாய், மகள் பலி!

கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் முன் பாய்ந்து தாய் மற்றும் மகள் பலியாகியுள்ளதுடன் ஒரு மகள் தப்பித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று பகல் 1 மணியளவில் வெயங்கொட மற்றும் பல்லேபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் கீனவல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் தாய் ஒருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் இவ்வாறு ஓடும் ரயில் முன் பாய்ந்ததாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் சடலமும் வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் வெயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment